சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது

Photo of author

By Anand

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது

பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் 1 ஆண்டு கழித்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு வாலிபர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருப்பத்தூர் மாவட்டம் திருமால்நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒரு ஆண்டு கழித்து போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.