குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. 

Photo of author

By Parthipan K

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. 

Parthipan K

A teenager who was brutally murdered in Gunnathur?..Police investigation!..

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!..

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் சிலர் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த சாயலை தான் கொண்டுள்ளார் என்பதை போலீசார் கூறினார்கள். மேலும் வாலிபர் தலையில் பலத்த காயமும் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது.

அவர் சிவப்பு நிறத்தில் ஒரு டீ சட்டையும் பிளாக் கலர் பேண்டையும் அணிந்துள்ளார்.இதையடுத்து திருப்பூரில் இருந்து மோப்பநாய் ஒன்று வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் வாலிபர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் அந்த மோப்பநாய் கவ்வி பிடிக்கவில்லை.

குன்னத்தூர் பகுதியில் பெரும்பாலான தனியார் பனியன்  நிறுவனம் ஒன்று மற்றும் நூல் மில்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு அதிகப்படியான வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் சில வாலிபர்கள் குளத்துப் பகுதிக்கு வந்து சென்றதாக அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சில வாலிபர்கள் கூறியிருந்தார்கள்.

மேலும் இது தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர்? இந்த கொலைகாரனா காரணம் என்ன? இவரை கொலை செய்த கொலையாளிகள் யார்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டு வருகிறது.