நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

Parthipan K

A teenager who went on a bike with a friend died suddenly! Police investigation!

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்( 21).இவருடைய நண்பர் அண்ணாநகர் நான்காவது தெருவை சேர்ந்த சிவசக்தி(21). இவர்கள் இருவரும் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளில் சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது.

அந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.மேலும் படுகாயம் அடைந்த சிவசக்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.