அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
135
A terrible incident happened to a government bus!! Shocking news that two lives have been lost!!
A terrible incident happened to a government bus!! Shocking news that two lives have been lost!!

அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

பண்ருட்டி பகுதியில் இரு இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதாக தகவல் வந்துள்ளது. சுகுமார் மற்றும் சரண்ராஜ் இருவரும் கடலூர் மாவட்டம் , பண்ருட்டி பகுதியில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் பண்ருட்டியை நோக்கி  சென்றதாக கூறப்படுகிறது. அதே சாலையில் எதிரே வந்த கும்பகோணத்தில்  இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. அதனை தொடர்ந்து மோதிய வேகத்தில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்துள்ளர்கள்.

மேலும் இந்த சம்பவம் திங்கள்கிழமை நள்ளிரவு 12.45 மணி அளவில் புதுப்பேட்டை ஐய்யனார் கோயில் அருகே நடந்தாக கூறப்படுகிறது. மேலும் பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே   உயிரிழந்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇனிமேல் ரேசன் கடைகளில் இதுவும் விற்பனை !! பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! 
Next articleகட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!