ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!!

Photo of author

By Savitha

ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!!

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளரின் இரு சக்கர வாகனம் திருடபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

இந்நிலையில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குடியருப்பு முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார். சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சொந்த பைக் மாதிரி ஹெல்மெட் அணிந்து திருடிய வண்டியை நேர்மையாக ஓட்டிசென்ற திருடனுடைய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.