அண்ணாமலைக்கு பொட்டு வைத்த பழங்குடியின பெண்.. அடுத்த நொடியே அழித்த சம்பவம்..!!
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து பாஜகவிற்காக தீவிரமாக வாக்குகளை சேகரித்து வந்தார். வாக்காளர்களின் வீடுகளில் சென்று உணவெல்லாம் கூட அருந்தினார்.
ஆனால் தற்போது அண்ணாமலை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணாமலை கடந்த வாரம் கோவை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.
பின்னர் அப்பகுதி பெண்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்த அண்ணாமலையின் நெற்றியில் அப்பெண் வெற்றி திலகமிட அடுத்த நொடியே அண்ணாமலை அதை அழிக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள காயத்ரி ரகுராம், “பழங்குடியின பெண்கள் நெற்றியில் திலகமிட்ட அடுத்த நொடியே அண்ணாமலை அதை அழித்ததை கண்டு அங்கிருந்த பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பழங்குடியின பெண்கள் வைத்த பொட்டை அழித்தது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள பாஜகவினர் அண்ணாமலை தனது நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கவில்லை. நெற்றியில் வியர்வை வடிந்ததால் அதை தான் துடைத்தார் என்று விளக்கம் அளித்துள்ளனர்.