இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..
பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நவநீத் சிங் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.பின் இறங்கி பார்ப்பதற்குள் கார் முன் பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வதென்றே தெரியாமல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அந்த வழியாக சென்ற சில வாகன ஓட்டிகளும் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது கருமேகங்கள் சூழ்ந்து கன மழை பெய்த வேலையிலும் கார் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. இதையடுத்து அங்குள்ள சிலர் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருக்கும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கொட்டும் மழையிலும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.