அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

0
255

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

 

தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள்.இன்று மட்டும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் திருப்பதி கோவில்களில் கூட்டம் அலைமோதியது.இக்கோவிலில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பக்தர்களின் கனவுகள் நிறைவேறியதால் அதற்கு காணிக்கையாக ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளார்கள்.நேற்று ஒரே நாளில் கோயிலுக்கு 80 ஆயிரத்து 312 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் தினமும் ஏழுமலையானின் காணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று மட்டும் 5 கோடியே 14 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாகவும், 29 ஆயிரத்து 538 பேர் தலைமுடியை காணிக்கையாகவும் கொடுத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

Previous articleஇயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..
Next articleஎலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here