கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

0
158
#image_title

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளில் ஒருவர் தப்பி செல்லும் முயற்சிக்கும் போது டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரை லாபகரமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஹெட் கான்ஸ்டபிள் மனோஜ் குற்றவாளியை டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் கைது செய்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட தியான் சிங் (26), நவ்நீத் (21) ஆகியோரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சட்டபட்டவர்கள் இருவர்களில் ஒருவரை கான்ஸ்டபிள் ஒரு கைத்துப்பாக்கியுடன் அவர்களை அணுகிய போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தப்பியோடினார், மற்றவர் தனது கைத்துப்பாக்கியை நோக்கி காவலரை மிரட்டினார் .

உடனே அந்த நபர் மீது போலீஸ்காரர் பாய்ந்து சரமாரியாக தாக்கினார். உள்ளூர் மக்களும் காவல்துறையினருடன் சேர்ந்து குற்றவாளிகளைக் பிடிக்க உதவினர்.

இந்த சம்பவத்தில் சாதுரியமாக செயல்பட்ட அவருக்கு டெல்லி காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

author avatar
Savitha