உணவு உட்கொண்ட பின்னர் ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயம்.ஏப்பம் வந்தால் வயிறு நிரம்பி விட்டது என்று புரிந்து கொள்ளலாம்.ஆனால் இந்த ஏப்பம் அடிக்கடி வந்தாலோ அல்லது புளித்த ஏப்பமாக இருந்தாலோ அதை அலட்சியம் செய்யக் கூடாது.
அதிகளவு ஏப்பம் வரக் காரணம்:-
செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்.அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு புளித்த ஏப்பம் வரலாம்.
சில வகை உணவுகளால் தொடர் ஏப்பம் வரலாம்.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அடிக்கடி ஏப்பம் வரும்.
வயிற்றில் புண் இருந்தால் புளித்த ஏப்பம் வரும்.உணவு ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்.சிலவகை மருந்துகளால் அடிக்கடி ஏப்பம் வரக் கூடும்.
உணவை வேகமாக உட்கொள்ளும் பொழுது காற்றையும் விழுங்கி விடுகின்றோம்.இதனால் அளவிற்கு அதிகமாக ஏப்பம் வரும்.
அதேபோல் பித்தப்பையில் கற்கள் இருந்தாலும் புளித்த ஏப்பம் அளவிற்கு அதிகமாக ஏப்பம் விடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஏப்பத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய் விதை – 20
2)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஏலக்காயில் இருந்து விதையை மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.கால் தேக்கரண்டி அளவிற்கு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இந்த நீரில் ஏலக்காய் விதைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஏப்பம் வருவது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – அரை தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை வடிகட்டி குடித்தால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.