கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட்  !! நியூயார்க் நீதிமன்றத்தில் பாய்ந்த பகீர் புகார்!!

Photo of author

By Vijay

india: அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட்.

கவுதம் அதானி சூரிய சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக ரூ.2100 மதிப்பிலான முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக FBI 2023 ம் ஆண்டு கவுதம் அதானியின் உறவினரான சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது.

250 மில்லியன் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக கவுதம் அதானியின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நியூயார்க் நீதிமன்றம் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக அதானி மற்றும் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதானியின் ADANI GREEN ENERGY LTD 12 ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு சோலார் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கு முதலீடு செய்த அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அதானி மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பல உண்மைகளை மறைத்து விட்டதாக புகார் வைக்கப்பட்டது.

அதாவது இந்த திட்டம் தொடர்பாக அதானி இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் லஞ்சம் தர முயன்றதாகவும்  அதை முதலீடு செய்த தொகையில் இருந்து தர முயன்றதாகவும், அதை முதலீட்டாளர்களிடம் மறைத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சாகர் அதானியின் வீட்டில் பென் டிரைவ் ஆவணங்கள் கிடைத்ததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.