ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை! வெளிவந்த திடீர் உத்தரவு!
தமிழகத்தில் சமீப காலமாக மாணவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என அவரது ஆசிரியரே கூறி பெண்ணை பாலியல் தொல்லை செய்தது அம்பலமானது.
அதேபோல கடந்த வருடம் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவி இடம் தவறு முறையில் நடந்து கொண்டுள்ளார். அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதனை எடுத்து தற்பொழுது சென்னையில் திருநின்றியூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அப்பள்ளியின் தாளாளர் அங்கு படிக்கும் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதர மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டார். இவர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேற்கொண்டு இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்த ஒரு தனியார் பள்ளிக்கு மட்டும் ஒரு வாரம் விடுப்பு அளித்துள்ளனர்.
மேலும் நடைபெற போகும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பிற்கு பிறகு தேர்வுக்கான தேதிகள் மீண்டும் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளனர்.