சற்றுமுன்: தவெக விஜய்யுடன் கூட்டணி இல்லை – நாம் தமிழர் சீமான் வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை!!

0
329
A while ago: No alliance with Dveka Vijay - Controversy over the X video released by Nam Tamilar Seeman!!
A while ago: No alliance with Dveka Vijay - Controversy over the X video released by Nam Tamilar Seeman!!

 

சற்றுமுன்: தவெக விஜய்யுடன் கூட்டணி இல்லை – நாம் தமிழர் சீமான் வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை!!

நடிகர் விஜய் அவர்கள் திரைத்துறையை விட்டு அரசியல் பயணத்தில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் வெளிவந்த உடனே இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் பெரும்பாலானவரின் கேள்வியாக இருந்தது.அதற்கேற்றார் போல மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறிவிட்டார். இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் கூட்டணி இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் அரசியல் அரசல் புரசலாக பேசும் சமயத்தில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் அவர்கள் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் சீமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாகவே பல பேட்டிகளில் சீமான் நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா அதற்குண்டான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் வாழ்த்து அறிவிப்பும் அதனை உறுதி செய்தது போல் இருந்தது.தற்பொழுது சீமான் அவர்கள் தனக்கு வாழ்த்து தெரிவித்த திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களை தனியாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

https://x.com/Seeman4TN/status/1801513245003440314

 

ஆனால் இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு மட்டும் எந்த ஒரு நன்றியும் தனிப்பட்ட முறையாக தெரிவிக்கவில்லை.இதன் மூலம் இவர்களது கூட்டணி முறிந்து விட்டது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல சீமான் அவர்களும் அந்த நன்றி தெரிவிப்பு அறிக்கையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் என தொடங்கி அம்மையார் சசிகலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திரையுலகில் சிவகார்த்திகேயன், சேரன், அமீர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்ட தனித்துவமாக நன்றியை தெரிவித்துள்ளபோது தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யின் பெயரை மட்டும் ஏன் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை என்று பலரது கேள்வியாக எழுந்துள்ளது.மேலும் இதன்மூலம் எங்களுக்குள்ளான கூட்டணி இல்லை என்பதை சீமான் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.