சற்றுமுன்: திடீரென முடங்கிய You Tube தளம்!! பொதுமக்கள் கடும் அவதி!!

Photo of author

By Rupa

சற்றுமுன்: திடீரென முடங்கிய You Tube தளம்!! பொதுமக்கள் கடும் அவதி!!

கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்குவது யூடியூப் தளம் தான். இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெருமளவில் உபயோகித்து வரும் நிலையில் இன்று காலை முதல் சில தொழில்நுட்ப காரணமாக பயனாளர்களால் உபயோகிக்க முடியாமல் உள்ளது.

இதே போல் ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த பொழுது கூகுள் நிறுவனம் இது குறித்து ஓர் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் சில தொழில்நுட்ப காரணங்களால் யூடியூப் ஆனது சிறிது நேரம் இயங்க தாமதமாகும் என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியிருந்தது. பல பயனாளர்கள் இந்த யூடியூப் மட்டும் நம்பியே தங்களது வருவாயை ஈட்டி வரும் நிலையில் தற்போது சர்வர் டவுன் ஆகவும், எந்த ஒரு வீடியோவும் அப்லோட் செய்ய முடியாமல் இருப்பதால் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பலரும் டீம் யூட்யூப் என்ற ட்விட்டர் பக்கத்திற்கு சென்று சர்வரில் உள்ள பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்தும் வருகின்றனர். யூடியூப் தளமானது அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் விரைவில் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளது.ஆனால் முத்தைய வருடத்தை போல இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.ஆனால் காலை 11 மணி முதல் மக்கள் இந்த பிரச்சனையை மக்கள் சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.ஓர் பக்கம் யூடியூப்  தளமானது இதனை கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் முடங்கப்போகிறது என்றும் கூறி வருகின்றனர்.