இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை! ஜி 20 மாநாடு கருத்தரங்கம்!

0
154
Do not fly drones in these places! G20 Conference Seminar!
Do not fly drones in these places! G20 Conference Seminar!

இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை! ஜி 20 மாநாடு கருத்தரங்கம்!

உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நடக்க உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர் பங்கேற்பனர் இந்தியாவில் ஜி 20 மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்றது.அதனால் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் சென்னையில் இரண்டாவது கட்ட கருத்தரங்க நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா  ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் கருத்தரங்கு நடைபெறும் ஹோட்டல் ரமடா பிளாசா, ஹோட்டல் ஹப்ளீஸ், ஹோட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஹோட்டல்களில் தங்குகின்றனர்.

அதனால் 25ஆம் தேதி வரையில் இவர்கள் தங்கி உள்ள ஹோட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஹோட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதிகளை ட்ரோன் மற்றும் இதர  ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு போலீசார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
Parthipan K