கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !! 

கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !! 

விதவைப் பெண் ஒருவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார். இந்த அதிர வைக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது.

பீகார் மாநிலத்தில் உள்ள  ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி வயது 45. கணவரை இழந்த இவர் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் தான் இவர் கண்கள் தோண்டப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு மிகவும் மோசமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட அவரது உடல் கிராமத்தில் உள்ள ஒரு வயல் பகுதியில் கிடந்தது.  அவரது உடலைக் கண்ட கிராம மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை நிலத்தகராறு காரணமாக நடைபெற்று இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. ஏனெனில் தேவியின் கணவர் பப்லு சிங்கும், அவரது சகோதரரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக 2 பேரும் கொலை செய்யப்பட்டதால் அது தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார்.

இந்த சூழ்நிலையில் அந்த குற்றவாளி கடந்த ஆண்டு ஜாமீனில் விடுதலை  பெற்று வந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த அந்த நபரே தேவியையும் இது போல கொடூர கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணை செய்கின்றனர். மேலும் அந்த குற்றவாளி எங்கு உள்ளார் என தேடி வருகின்றனர்.

மேலும் கொலை செய்த குற்றவாளியை கைது செய்யக் கோரி தேவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.