முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்! 

0
276
#image_title

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்! 

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் முனுசாமி, (வாது 98) மற்றும் கருப்பம்மாள், (வயது 90) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக முனுசாமி உயிர் பிரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் இன்று நடைபெற இருந்தது.

கணவனை இழந்த சோகத்திலும் மன வேதனையிலும் இருந்த கருப்பம்மாள் இன்று காலை சுமார் 11 மணியளவில் கணவன் உடல் அருகில் அழுது கொண்டிருக்கும் பொழுது அவரது உயிரும் பிரிந்தது.

முதிர்ந்த வயதிலும் கணவனை பிரியாமல் வாழ்ந்து வந்த மனைவி கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்திருப்பது கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவிவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கையில் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்! 
Next articleமலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!