பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

0
155
A woman came to complain with a petrol can!! Shocked Police!!
A woman came to complain with a petrol can!! Shocked Police!!

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார்.

அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது அந்த பையில் பெட்ரோல் கேன் இருப்பது தெரிய வந்தது.

இதனை போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.பின்னர் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சாவடி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இவர் பெயர் ராஜகிளி என்பதும் இவருக்கு திருமணமாகி இருப்பதும் விசாரனையின் போது தெரிய வந்துள்ளது.ராஜகிளிக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவியது .

அதில் ராஜகிளிக்கு பெற்றோர்கள் சொத்து எதுவும் தராமல் துன்புறுத்தியதாக தெரிய வருகின்றது.இதனால் நீண்ட காலமாக இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டு வந்ததாக கூறினார்.

இதன் தொடர்பாக ராஜகிளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் அவர்கள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

அதனால் என் பெறோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தீக்குளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் எடுத்து வந்த அந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பின்பு ராஜகிளி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Previous articleமீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!
Next articleடபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!!