Home Breaking News 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா… 

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா… 

0
2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா… 

 

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா..

 

அமெரிக்கா நாட்டில் 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்கா நாட்டித் கடந்த மாதம் முதல் வெயில் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தாகத்திற்கு 35 வயதுடைய பெண் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மயங்கி கீழே விழுந்த அந்த பெணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவருடைய நிலைமை மோசமடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து தண்ணீர் குடித்து உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் அவர்கள் “தண்ணீர் குடியுங்கள் என்று சகோதரியிடம் யாரோ ஒருவர் கூறியுள்ளார். அதை கேட்டு அவரும் 20 நிமிடத்தில் 4 பாட்டில் தண்ணீர் அதாவது கிட்டத்தட்ட 2 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார்.

 

பின்னர் மயங்கி விழுந்த அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். நாங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம். மருத்துவமனையில் அவருடைய நிலைமை மோசமடைந்தது. பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று கூறினார்.

 

இந்த சம்பவம் குறித்து மருத்துவர் பிளேக் ப்ரோபெர்க் அவர்கள் “இது போன்ற சம்பவங்கள் கோடை காலத்தில் அதிகமாக நடைபெறுகிறது. ஏனென்றால் வெயில் காலத்தில் தான் தாகம் அதிகம் எடுக்கும். அப்பொழுது தான் தண்ணீரை அதிக அளவு எடுத்துக் கொள்வார்கள். தண்ணீர் குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படுவது எதனால் என்றால் தண்ணீர் சத்து உடலில் அதிகளவு இருந்தாலும் போதுமான சோடியம் சத்து உடலில் இருக்காது. அப்போது இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

 

முக்கிய குறிப்பு…

 

தண்ணீர் அதிகமாக குடிப்பதால் தசைப் பிடிப்பு, வலி, குமட்டல், தலைவலி ஆகியவை ஏற்படும். அப்படி இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தகுந்த சிகிச்சை இல்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.