வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்!!

Photo of author

By Sakthi

வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்!!

Sakthi

 

வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்…

 

டெல்லி மாநிலத்தில் வேலையில் இருக்கும் காவலர் ஒருவரை பெண் ஒருவர் அறைந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

 

டெல்லி மாநிலத்தில் வேலையில் இருந்த காவலரை பெண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் கர்காலேஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சீருடையில் உள்ள காவலரை கன்னத்தில் அறைந்தார். இளம்பெண் அறைந்ததில் அந்த காவலர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். காவலர் கீழே விழுந்தும் அந்த பெண் அந்த காவலரை விடவில்லை. தொடர்ந்து அந்த இளம்பெண் கீழே விழுந்த காவலரை சரமாரியாக தாக்குவது போன்ற காட்சிகள் உள்ளது.

 

காவலரை இளம்பெண் தாக்குவதை பார்த்து அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் காவலரை தாக்குவதை நிறுத்துமாறு இளம்பெண்ணை எச்சரித்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பெண் காவலரை விடாமல் தாக்குவது போல காட்சிகளும் உள்ளது.

 

இந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகின்றது. எக்ஸ் பக்கத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் காவலரை இளம்பெண் தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அந்த இளம்பெண் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.