திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! 

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!!

திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் கோட்டைமேடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தான் கார்த்திக்கேயன். இவருக்கு புஷ்பவல்லி என்ற பெண்ணுடன் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் புஷ்பவல்லிக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று  அவருக்கு மிக அதிக  வயிறு  வலி  ஏற்பட்டது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செடிகளுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை அருந்தியுள்ளார். இதனை கண்ட கணவர் அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புஷ்பவல்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கார்த்திக்கேயன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலியால் அப்பெண் பூச்சி மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment