கணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி
திருமணமான தம்பதியர்களில், ஒரு சிலர் சேர்ந்து வாழ மனம் விரும்பாமல் விவாகரத்து செய்துக் கொள்வது வழக்கம்.
அப்படி தான் லண்டனில் ஒரு பெண். அவர் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என்று விவாகரத்து கேட்டுள்ளார்.
இது குறித்து காரணம் கேட்ட போது, என் கணவர் நான் வளர்க்கும் பூனை பென்ஜியை. அவருடன், வேலை செய்யும் மற்றொரு நண்பரிடம் கொடுத்து விட்டார்.
அவன் வெறும் பூனையல்ல, அவன் எனக்கு இன்னொரு தந்தை மாதிரி, என் சிறு வயதிலேயே, என் தந்தையை நான் இழந்துவிட்டேன்.
அப்பொழுது தான் பென்ஜி எனக்கு கிடைத்தான், பென்ஜி குழந்தையாக இருந்த நாளில் இருந்தே வளர்க்க தொடங்கி விட்டேன்.
பென்ஜியின் கண்கள், என் தந்தையின் கண்ணை போன்றே இருக்கும், அதனால் எப்பொழுதும் அவன் என் மடி மீதே தான் இருப்பான்.
பென்ஜியை என் தந்தை என்று தான், நான் எப்பொழுதும் சொல்லுவேன். அதனால் என் கணவர், என் தந்தையின் ஆன்மா பென்ஜிக்குள் இருக்கிறது போல், என நினைத்து அச்சம் கொண்டார்.
ஒரு நாள் என் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன், திரும்பி வந்து பார்த்த பொழுது என் பூனை வீட்டில் இல்லை.
என் கணவரிடம் கேட்டதற்கு, நான் தான் பூனையை என்னுடன் பணி புரியும் சக நண்பரிடம் கொடுத்து விட்டேன். என சொன்னார்.
என் பென்ஜி எனக்கு வேண்டும், அவனை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவரவில்லை என்றால், இனி என்னிடம் நீங்கள் பேச கூடாது. என்று சொன்னேன், அதனால் பூனையை கொடுத்த நண்பரிடம் மீண்டும் சென்று கேட்டுள்ளார், அவர் தர மறுத்து விட்டார்.
என் பென்ஜி இல்லாத வீட்டில் இனி நான் இருக்க மாட்டேன், அவனை என்னிடம் இருந்து பிரித்த உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன். எனக்கு விவாகரத்து வேண்டும். என சொல்லியிருக்கிறார்.
இதை பற்றி ரெடிட் தள பதிவில், பதிவிட்டுள்ளார்.