ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !!

0
115
Dilruba-Sharmi
Dilruba-Sharmi

ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !!

சமீபகாலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.சமூக ஊடகங்களில் சில ஆண்கள், பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவர்களிடமிருந்து பணம் அல்லது அவர்களது கற்பை சூறையாடி விட்டு செல்கின்றனர்.இது போன்ற சம்பவங்கள் ஏராளமானது வெளியானாலும், தொடர்ந்து இந்த நிகழ்வுகள் இப்போது வரை நடந்து கொண்டு தான் உள்ளது.

அவ்வாறே ஆன்லைன் காதலினால் வங்காளதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில், சரஸ்வதி மாவட்டத்தில், பர்தா ரோஷன்கர் என்ற கிராமத்தில் சமயல் கலைஞராக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் தான் அப்துல் கரீம்.

இவருக்கும் வங்காளதேசத்தை சேர்ந்த தில்ரூபா ஷர்மி எனும் பெண்ணிற்கும் நட்புறவு ஆரம்பித்தது. அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட தொடங்கியது.தில்ரூபா ஷர்மியின் கணவர் கொரோனா காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து விட்டார்.இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்தனர். பின் லக்னோவில் ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து இரண்டு நாட்கள் தங்கி வந்தனர். அப்துல் கரீம்,தில்ரூபா ஷர்மியை அவரது கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.
கிராமத்திற்கு சென்ற பிறகுதான் அப்துல் கரீமிற்கு ஏற்கனவே கல்யாணமான சம்பவம் அப்பெண்ணிற்கு தெரிய வந்தது.

இந்த கள்ளக்காதலை அப்துல் கரீம் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் எதிர்த்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் இந்த சம்பவம் விசாரணைக்கு சென்றது.விசாரணை முடித்த பிறகு அந்தப் பெண் அவரது சொந்த ஊரான வங்காள தேசத்திற்கு திரும்ப செல்வதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

ஆன்லைன் காதலனை கரம் பிடித்து விடலாம் என்று நினைத்து தனது 3 குழந்தைகளுடன் ஆசையாக வந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம் அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

Previous articleஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?
Next articleபெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!