ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள் இருவருமே கூலி தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தலை மற்றும் உடலை பலத்த அடிபட்ட நிலையில் இருவரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நேற்று அங்கு சிகிச்சை பலனின்றி பெரியநாயகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்களா அல்லது இதற்கு யாராவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.