வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

Photo of author

By Divya

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

Divya

நமது குடலில் தேவையில்லாத கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியம் கேள்வியாகிவிடும்.நமது குடல் பகுதியில் தேவையில்லாத கழிவுகள் தேங்கினால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

செரிமானப் பிரச்சனை இருந்தால் இந்த பாதிப்புகளை அனுபவிக்க கூடும்.மலக்குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற சுக பேதி முறையை பின்பற்றலாம்.

வயிற்றுக் கழிவுகளை அகற்ற வீட்டு வைத்தியம்:

தேவைப்படும் பொருட்கள்:-

1)கல் உப்பு
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு சூடாக்க வேண்டும்.

பிறகு இந்த உப்பு நீரை கிளாஸிற்கு ஊற்றி எலுமிச்சம் பழச்சாறை கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெது வெதுப்பான தண்ணீர்
2)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து காலி வயிற்றில் பருகினால் சுகபேதி ஆகும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் குடலில் குவிந்த கழிவுகள் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் குடல் கழிவுகள் நீங்கும்.