நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்!
நரம்பு மண்டலம் தான் நமது உடலில் இயக்கம், ஐம்புலன்களின் செயல்பாடு இவற்றை கட்டுப்படுத்தக் கூடியது. சில காரணங்களினால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இதை கண்டறிந்தால் எளிமையான முறையில் குணமாக்கலாம். நரம்பு மண்டலத்தில் சில பகுதிகளில் நரம்புகள் சரியாக செயல்படாமல் இருக்கும். இதுவே நரம்பு பலவீனமாகும். சிலருக்கு இது தற்காலிகமானதாக இருக்கும். அதுவே சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும் எளிய வீட்டு வைத்து முறையை தற்போது பார்ப்போம்.
1. இதற்கு முதலில் இரண்டு கிராம்பை எடுத்துக் கொள்ளவும். இது மன அழுத்தத்தை போக்கக்கூடியது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. பார்க்கின்சன் எனப்படும் நடுக்குவாதத்தை சரி செய்யக்கூடியது.
2. அடுத்து எடுத்துக் கொள்ளக்கூடிய பொருள் இலவங்கப்பட்டை. பிராணவாயுவை அதிகரிக்கிறது. மூளையில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது. நரம்பில் உள்ள திசுக்கள் சேதமாகாமல் இருப்பதற்கும், செயலிழக்காமல் இருப்பதற்கும் உதவுகிறது.
3. அடுத்து எடுக்கப் போகும் பொருள் ஏலக்காய். இதில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, பி, சி என நிறைய சத்துக்கள் உள்ளன. இது நமது உடலில் உள்ள பித்தத்தை நீக்கி, நரம்பு தளர்ச்சியை போக்கும்.
இடிக்கிற கல்லில் 2 கிராம்பு, ஒரு துண்டு பட்டை,2 ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும். நன்றாக பவுடர் போல் இடித்ததும் , அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 200ml தண்ணீரை ஊற்றவும். அதில் இடித்த கலவையை போடவும்.
200மிலி தண்ணீர் 150 மிலி யாக மற்றும் வரை கொதிக்க விடவும். தசைப்பிடிப்பு, தசைகளில் வலி, சோர்வு, சிலருக்கு கூச்ச உணர்வு இருக்கும். சிலருக்கு உணர்வே இருக்காது. தசைகளில் வலு குறைதல் காலின் முன் பகுதியை உயர்த்த முடியாமை, பார்வை குறைபாடு,பொருட்களின் வாசனையை உணர முடியாமை, நடுக்கம், அடிக்கடி தலைவலி ஏற்படுதல், போன்ற காரணங்களினால் நமக்கு நரம்பு பலவீனம் ஏற்பட்டு இருப்பதை உணரலாம்.
தண்ணீர் நன்றாக கொதிந்ததும் அதில் சுவைக்காக ஒரு ஸ்பூன் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் ஓரளவு சூடு ஆறியதும் ஒரு டம்ளரில் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை அருந்தலாம்.
பொதுவாக இந்த பானத்தை இரவு உணவு முடிந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம். ஒரு 15 நாள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வர நரம்புகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் அடைப்புகள் நீங்கி பலவீனமான நரம்புகள் நன்றாக வலுவாகும்.