கிட்னியில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேற்றும் அற்புத பழம்!!

Photo of author

By Divya

உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கிறது.உடலில் உள்ள ஒட்டுமொத்த உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க சிறுநீரகம் முக்கிய காரணமாகும்.இதனால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.

சிறுநீரக கற்கள்,சிறுநீரக தொற்று,துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்,நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் படிவது தான்.இதை முழுமையாக வெளியேற்ற பழங்களை உட்கொள்ளலாம்.

பழங்களின் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளும் போது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

1)எலுமிச்சை

இதில் அதிகளவு சிட்ரிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.இந்த பழச்சாறை அருந்தினால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

2)அன்னாசி

இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது.அது மட்டுமின்றி சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.

3)ஆப்பிள்

இந்த பழத்தில் வைட்டமின்,நார்சத்துகள் அதிகம் காணப்படுகிறது.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சிறுநீரக நோய்த்தொற்று அபாயம் குறையும்.

4)ஆரஞ்சு

இது அனைவரும் விரும்பும் பழங்களில் ஒன்று.வைட்டமின் சி,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த பழத்தை உட்கொண்டால் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

5)தர்பூசணி

இதில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது.இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் நச்சுக் கழிவுகள் தேங்குவது தடுக்கப்படும்.