தோழியை ஆழமாக காதலித்து வந்த இளம்பெண் செய்யத் துணிந்த காரியம்!! சாமியாரால் உயிரை இழந்த உயிர்க்காதல்!! 

0
142
A young girl who was deeply in love with her friend dared to do this!! The brutality of the life-giving preacher!!

தோழியை ஆழமாக காதலித்து வந்த இளம்பெண் செய்யத் துணிந்த காரியம்!! சாமியாரால் உயிரை இழந்த உயிர்க்காதல்!!   

தனது தோழியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு சாமியாரிடம் சென்ற இளம்பெண் விபரீதமான நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவரின் தோழி பிரீத்தி. பூனம் பிரீத்தியை ஆழமாக நேசித்து வந்துள்ளார். இரண்டுபேரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பிரீத்தியை திருமணம் செய்துக் கொள்ள ஆணாக மாறவும் பூனம் முடிவு செய்தார்.

பூனம் பிரீத்தியை  விட்டு நகராமல் சுற்றிக் கொண்டிருந்ததால் பிரீத்தியின் தாயார் ஊர்மிளாவுக்கு கடுமையான ஆத்திரம் ஏற்ப்பட்டது. பூனத்தால் தான் தனது மகள் பிரீத்தியின் திருமணம் இதுவரை நடைபெறாமல் உள்ளது என அவர் கருதினார். தன்னுடைய  மகளின் திருமணத்திற்கு தடையாக உள்ள பூனத்தை ஒழித்துக் கட்ட ஊர்மிளா முடிவு செய்தார்.

எனவே அவர் லக்கிம்பூர் கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்து அவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து பூனத்தை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் தான் ஆணாக மாற அதே சாமியாரை பூனமும் சந்தித்து உள்ளார். இதனால் மந்திரவாதி ராம்நிவாஷ் பிரீத்தியையும், பூனத்தையும் ஒரு அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார்.

அங்கு காட்டில் வைத்து பூனத்தை கட்டாயம் ஆணாக மாற்றுவேன் எனவும் இருவரின் திருமணம் குறித்தும் பேசியுள்ளார். மேலும் பூனம் மட்டும் ஆணாக மாற மறுபடியும் காட்டிற்கு சில பூஜைகள் செய்ய தனியாக வர வேண்டும் எனவும் மந்திரவாதி கூறியுள்ளார். இதை நம்பிய பூனம் தனியாக கட்டிற்கு சென்று உள்ளார். அங்கு அவரை கொன்ற மந்திரவாதி உடலை அங்குள்ள ஒரு முட்புதரில் மறைத்து வைத்துள்ளான்.

இந்நிலையில் பூனத்தை காணவில்லை என புகார் வரவே போலீஸ் அவரின் உடலை காட்டில் இருந்து மீட்டுள்ளனர். அவரின் உடலை பூனத்தின் சகோதரர்  பர்விந்தர் உடையை பார்த்து அடையாளம் காட்டினார். அவர் கூறிய புகாரின் அடிப்படையில் பூனத்தை கொன்ற மந்திரவாதி மற்றும் பிரீத்தியை கைது செய்தனர். கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த பிரீத்தியின் தாயான தலைமறைவாக உள்ள ஊர்மிளாவைத் போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleதிரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Next articleSC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!