Breaking News, District News

கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை 

Photo of author

By Anand

கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை 

Anand

Button

கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை

வேளாங்கண்ணியில் கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அரிவாளுடன் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த மாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர். இவருக்கும், சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒரு சிலருக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த மனோஜ்பிரபாகர் தனது நண்பர்களுடன் கஞ்சா போதையில் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திற்கு கையில் அறிவாளுடன் வந்துள்ளார். பின்னர் அவ்வழியே சென்ற ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி மிரட்டியதுடன், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களையும், அப்பகுதி பொதுமக்களையும் அரிவாளை காட்டி அச்சுறுத்தியும் உள்ளார்.

அப்போது போலீசாருக்கு பயப்பட மாட்டேன் என்றும் தன்னை எதிர்த்தவனை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்றும் வீர வசனம் பேசியுள்ளார். இவர் இப்படி அலப்பறை செய்வதை அருகிலுள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து காவல்துறையினர் கவனத்திற்கு சென்றுள்ளது.

விரைந்து வந்த வேளாங்கண்ணி காவல் துறை அதிகாரிகள் மனோஜ் பிரபாகரனை கைது செய்து அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரை இன்று நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மனோஜ் பிரபாகரனின் நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் 

டிக் டாக் அழகனின் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் !.கற்பை இழந்த கல்லூரி மாணவி?

Leave a Comment