1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் 

0
164

1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

வேலூரை சேர்ந்த ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் 79,000 பேர் , மொத்தமாக 4 ஆயிரத்து 383 கோடி முதலீடு செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவினை தெரிவித்துள்ளனர்

வேலூரை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது.

இந்த நிதி நிறுவனம் மீதான புகாரை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து கடந்த 5ம் தேதி முதல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட சோதனையின் அடிப்படையில் இந்த நிறுவனத்தில் மொத்தமாக 79 ஆயிரம் பொதுமக்கள், தங்கள் முதலீடாக சுமார் 4383 கோடி முதலீடு செய்தது தெரியவந்துள்ளது

மேலும் சென்னை அரக்கோணம் வேலூர் உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவர்களுக்கு உரிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

அந்த வகையில் தற்போது இந்த நிறுவனத்தின் டைரக்டர்களாக இருப்பவர்கள் விவரம் தெரிய வந்துள்ளது.அதில்
1 லட்சுமி நாராயணன் சுந்தரம்
2. சுந்தரம் வேதநாரயணன்,
3 சுந்தரம் பக்தவச்சலம்
4.கஜேந்திரன், வியாசர்பாடி, சென்னை
5.விவேக், அனுமந்தபுரம். மூலப்பாளையம், ஈரோடு, உள்ளிட்டோர் இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனத்தை தொடர்ந்து, கீழ்க்கண்ட நிறுவனங்களையும் ஆரம்பித்து அதன் மூலமாகவும் முதலீடுகளை பெற்றதும் தெரியவந்துள்ளது
a. Marc opportunity Development Ltd., Katpadi, Vellore
b. Comtantius Corporate Business Services, Mylapore, Chennai
c. Accordience Business Service, Katpadi, Vellore:
d. Arles Maxent Associates, Olympia Tower, Chennai

மேலும் ஐ எஃப் எஸ் நிதி நிறுவனம் எந்த ஒரு முதலீடு திட்டமும் இல்லாமல், முதலீடு செய்தவர்களின் பணத்தையே, முதலீடு செய்தவர்களுக்கே , வட்டியாக திருப்பிக் கொடுத்தாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கையும், முதலீட்டு தொகையும் மேலும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிய மெயில் ஐடி [email protected] ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதே போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 89 ஆயிரம் பேர் சேர்ந்து சுமார் 1680 கோடி ரூபாய் முதலீடாக செய்ததும் தெரியவந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருச்சி சேர்ந்த Elpin -e-Com Ltd என்னும் நிறுவனம் சுமார் 5000 நபர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றதையும் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை தெரிவித்துள்ளது

மேற்கண்ட 3 நிறுவனங்கள் தொடர்பாகவும் 19 வழக்குகளை பதிவு செய்து அது குறித்து தனி விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.