நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர்-தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Savitha

கண்ணூர் தலச்சேரியில் நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர். தனியார் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை.

கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி பகுதியிலுள்ள எரஞ்சோலி பாலத்தில் அருகில் நேற்றிரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக தெரிகிறது.

அப்பொழு ஏற்பட்ட வெடி விபத்தில் விஷ்ணுவின் இரு கைகளின் கைவிரல்கள், உள்ளங்கைகள் துண்டானது. வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது விஷ்ணி மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு தலச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷ்ணு, பின் கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பகுதியில் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் பாஜக தலைமைக்கு தெரிந்தே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பின் போது வெடிகுண்டு வெடித்ததாக CPM குற்றம் சாட்டியுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது மேலும் பலர் அங்கு இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் விஷ்ணுவின் வாக்குமூலத்திற்கு பிறகே இந்த சம்பவம் குறித்து மேலும் தெளிவு கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.