குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

0
153
#image_title

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

மைதானத்திற்கு உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் இருக்கும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கொடிகளையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் சிஎஸ்கே – இராஜஸ்தான் இராயல்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதனால் உற்பத்தியாகும் குப்பைகளை அகற்ற கூடுதல் தூய்மை பணியாளர்களை சென்னை மாநாகராட்சி நியமித்துள்ளது. மைதானத்திற்குள்ள உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பிளாஸ்டிக் வாட்டர், குளிர்பான பாட்டில், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் மைதானத்தை சுற்றி பச்சை, நீலம் நிறம் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன.

மேலும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ச்சியாக ரசிகர்களை மைதானத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியும் வருகின்றனர்..