ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம்  பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!

0
114
A young woman crawling with a mustache like men! The people of the area were surprised!
A young woman crawling with a mustache like men! The people of the area were surprised!

ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம்  பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!

பொதுவாக பெண்களுக்கு  முகத்தில் முடி வளர்வது வழக்கம் ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதிக அளவில் வளர்வதால் அவர்கள் அதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். யாரேனும் பார்த்து கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெண்கள் அதனை முறையாக பராமரித்து வருவார்கள். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜீ (35). ஷைஜீவின் முகத்தில் ஆண்களைப் போலவே மீசை வளர்ந்துள்ளது.

ஷைஜீ அந்த மீசையை  முறுக்கி புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் ப்ரொபைல்லாக வைத்துள்ளார். அனைவரும் ஆண்களை மட்டுமே மீசையுடன் பார்த்து வந்த நிலையில் தற்போது பெண் ஒருவர் மீசியுடன் காட்சியளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சிலர் ஷைஜீவை கேலி செய்து வந்துள்ளனர்.

ஆனால் ஷைஜீ சிறிதும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன் என்றோம் எனவும் கூறியுள்ளார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் உதட்டின் மேல் பகுதியில் முடி அடர்த்தியாக காணப்பட்டது. ஆண்களின் மீசை போல வளர்ந்து இருப்பதை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஆனால் அது எனக்கு பிடித்த காரணத்தால் நான் அந்த மூடியை  அகற்றவில்லை எனவும் கூறினார்.

மேலும் மீசை இருப்பதால் எனக்கு கூச்சம் எதுவும் இல்லை அதனை வளர்க்கத் தொடங்கிய பின்னர் மீசை இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை என்பதை உணர்ந்தேன் என்றும் கூறினார். எனது  மீசை எனது மகளுக்கு மிகவும் பிடித்துள்ளது அதனால் மற்றவர்கள் கேலி செய்வதை கேட்டு நான் வருத்தப்பட மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். நான் எப்பொழுதும் எனது மேசையை அகற்ற போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

author avatar
Parthipan K