போதையில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைகளை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்த இளம் பெண்

Photo of author

By Anand

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைகளை கட்டி கத்தியால் குத்தி கொலை செய்த இளம் பெண்

தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டத்தில் உள்ள முலுகு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சங்கீதா.அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் சீனு. கடந்த சில மாதங்களாக சங்கீதா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்லும் சீனு

சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சங்கீதா வீட்டுக்கு குடிபோதையில் சென்ற சீனு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். இப்போது என்னுடைய ஆசைக்கு இணங்கு என்று கூறி பாலியல் வலை விரித்தார். சங்கீதா மறுத்து பேசி இருக்கிறார்.ஆனாலும்

சீனு தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். அப்போது சீனு போதையில் தள்ளாடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆவேசம் அடைந்த சங்கீதா அவருடைய முழு போதையை தனக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்து கொண்டு அங்கிருந்த கயிறு ஒன்றை எடுத்து முதலில் சீனு கைகளை கட்டிப்போட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சீனுவை குத்தி கொலை செய்தார். இதனால் சீனு அலறி துடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். நடந்த விஷயத்தை அவர்களிடம் கூறிய சங்கீதா நேராக காவல் நிலையத்திற்கு கத்தியுடன் சென்று சரணடைந்து விட்டார்.

சங்கீதாவை கைது செய்த போலீசார் சீனு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வரங்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சங்கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.