மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!
விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது.
அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் செய்திருந்தனர்.எனவே மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டிருந்தனர்.
அந்த வகையில் தற்பொழுது வரை 2.67 கோடி பேர் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற பட்சத்தில் தற்பொழுது வரை 2.26 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அவ்வாறு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளவர்கள் சரியாக இணைக்கப்பட்டதா என்பதை கண்காணிக்க தற்பொழுது மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,http://www.tnbltd.gov.in/bill status/billstatus.xhtml இணையம் வாயிலாக தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து சரியாக உள்ளதா என்பதை கண்காணித்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.
மின்வாரியம் அளித்துள்ள கால அவகாசம் இன்னும் மூன்று நாட்களுக்குள் முடிவடைய உள்ள நிலையில் மக்கள் அனைவரும் சற்று எச்சரிக்கையுடன் சரி பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.