இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அதனை தொடர்ந்து வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் முக்கிய முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது. அந்த முடிவின்படி அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகள் மற்றும் இரட்டை வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முக்கிய முடிவானது இந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் UIDAI போன்ற அமைச்சகத்தின் உயர் மட்ட தலைவர்களோடு மார்ச் 18 ஆம் தேதி டெல்லியில் கலந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஒருமனதாக இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் இதன் மூலம் தேர்தல்களில் வெளிப்படை தன்மையை உணர முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் :-
✓ புதிய வாக்காளர்கள் படிவம் 6
✓ பழைய வாக்காளர்கள் படிவம் 6B
ஆகிய இரண்டு படிவங்களை பூர்த்தி செய்வதன் மூலம் உங்களால் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைக்க முடியும்.
ஒருவேளை உங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் உங்களுடைய பான் கார்டு பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் போன்ற உரிமங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.