Breaking News, Technology

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

Photo of author

By Parthipan K

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

Parthipan K

Button

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

உலகம் முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது

ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு சிலருக்கு ஆதார் அட்டையுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகம் இருக்கும். இதற்காக மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறியலாம். TAFCOP போர்டல் மூலம், உங்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

 

மேலும் தொலைத்தொடர்புத்துறை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள TAFCOP இணையதளம் மூலம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வசிக்கும் மக்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களை நொடிப்பொழுதில் அறிந்து கொள்ளலாம்.

ஆதார் மொபைல் எண்ணை எப்படி தெரிந்து கொள்ளும் முறை. முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று.

அங்கு சாட்பாக்ஸில் உங்கள் மொபைல் எண்ணை போட வேண்டும் பிறகு OTP என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுக்கு வந்திருக்கும் ஒடிபியை பதிவு செய்ய வேண்டும். மேலும்

இதனை பதிவு செய்தவுடன் உங்கள் ஆதாரில் இருக்கும் மொபைல் எண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

மேலும்

ஆதார் மொபைல் எண் புகார் அளிக்கும் முறை

தவறுதலாக உங்கள் ஆதாரில் வேறொருவர் மொபைல் எண்ணும் இருந்தால் TAFCOP பக்கத்திலேயே புகாரும் அளிக்க முடியும். மேலும் அந்தப் பக்கத்தில் ’This is not my number’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் ஆதாரில் இருந்து தேவையற்ற மொபைல் எண்ணை நீக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கிவிடலாம்.  என அரசு தெரிவித்துள்ளது.

 

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்?

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!

Leave a Comment