இதனை பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் மின் கட்டணம் அண்மையில் தான் உயர்த்தப்பட்டது.இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவ்வாறு இணைப்பதன் மூலம் 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை இணைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகளில் இதுவரை 1 கோடியே 3 லட்சம் பேர் மின் இணைப்பு ஆதார் எண்னை இணைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்தும் வகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.அதுபோல தான் அரசு தற்போது வழங்கி வரும் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் எண் என்பது கட்டாயம் என தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது.