தேர்தல்களின் பொழுது நிகழக்கூடிய போலி வாக்காளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் ஆணையம் ஆனது முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இது குறித்த சிற்றறிக்கைகளை தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என அனைத்திற்கும் தீர்வு காண முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக மார்ச் 18 ஆம் தேதி போலி வாக்காளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயமாக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் வருகிற மார்ச் 18ஆம் தேதி உள்துறை அமைச்சகத்துடன் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரி போன்றவர்களின் உடைய பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து கேட்டு தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு கூட முடிவு காண வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையமானது முடிவு செய்திருக்கிறது.இந்த முடிவுகளின் பெயரில் இந்தியா முழுவதும் உள்ள போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு இனி தேர்தல்களில் போலி வாக்குகளை போட முடியாத அளவு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக தற்பொழுது பார்க்கப்படுவது ஒரே எண்ணை கொண்ட வாக்காளர் அடையாள அட்டை தான் அதாவது வெவ்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் இருந்தாலும் அவர்களுடைய வாக்கு வங்கி மாநிலம் யூனியன் பிரதேசம் போன்றவைகள் வாக்குச்சாவடி உள்ளிட்டவைகள் வெவ்வேராகத்தான் அமைகிறது. என் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்களுடைய விவரங்கள் வேறு வேறாக இருக்கிறது இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லை என எண்ணுவது சரியாக வராது என்ற காரணத்தால் இது போன்ற ஒரே இபிஐசி எண்களை நீக்கிவிட்டு அதற்கு மாறாக தனித்துவமான எண்ணை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு முழுவதுமாக முடிவு கட்ட முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தனித்துவமான இபிஐசி என்னை ஒதுக்குவதை உறுதி செய்வதற்கு யூரோநெட் 2.0 தளமானது புதுப்பிக்கப்படும் என்றும் அந்த தளத்தில் இனி இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தனித்துவமான எண்கள் வழங்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இது மட்டுமே போலி வாக்காளர் பிரச்சினையை சரி செய்வதற்கான முக்கிய முடிவாக இருக்கலாம் என்றும் மேலும் இது குறித்த தெளிவான முடிவு மார்ச் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.