ஆதார் பான் மற்றும் பிறப்பு சான்றிதழ் இனி செல்லாது.. உடனே இதை மாற்றுங்கள்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

ஆதார் பான் மற்றும் பிறப்பு சான்றிதழ் இனி செல்லாது.. உடனே இதை மாற்றுங்கள்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

நம் அன்றாடம் பயன்படுத்தும் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய மத்திய மற்றும் மாநில காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பு பான் கார்டு விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் புதிய வரைமுறையை வகுத்துள்ளது.

ஆதார் கார்ட்:

முதலாவதாக ஆதார் கார்டு மூலம் நடக்கும் திருட்டு உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக யூடிஐ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒரே ஆதார் கார்டு பயன்படுத்தி வந்தால் அதனை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று கூறியது. இதற்கான கால அவகாசமானது செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை கொடுத்துள்ளனர். மேற்கொண்டு தங்களது தனிப்பட்ட திருத்தங்களை அடுத்த ஆண்டு முதல் திருத்திக் கொள்ளலாம் என்றும் ஆனால் இந்த புதுப்பித்தலை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவு:

2000 ஆம்  ஆண்டு பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசமானது 2020 முதல் இந்த வருடம் டிசம்பர் வரை கொடுத்துள்ளனர். தற்பொழுது 5 மாதங்கள் உள்ள நிலையில் பெயர் இல்லாத சான்றிதழ்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். மேற்கொண்டு இவ்வாறான கால அவகாசம் கொடுக்கப்படாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பான் கார்டு விண்ணப்பித்தல்:

ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளதோ அதேபோல தான் பான் கார்டும். சிறு சிறு கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பிக்கும் வசதியானது வந்து விட்டது. இதனால் பல மோசடி நடப்பதாகவும் விரைவில் இதற்கென்று தனி மையம் அமைப்பதாகவும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்கு என்று தனி மையம் செயல்பட்டு வருவது போல பான் கார்டு பெறுவதற்கும் இதுபோல ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு மூன்று முக்கிய அடையாள ஆவணங்கள் குறித்த அறிவிப்புகளை மத்திய மற்றும் மாநில அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.