இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருப்பாரோ என்று சந்தேகம் எழும்பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இனி குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது :-
குடியுரிமைக்கான சான்று மாற்றப்பட்டிருப்பது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய தொடர்ச்சியான விவாதத்தால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக வங்கதேசம் மற்றும் பல சமூகத்தை சேர்ந்த சட்டவிரோத மக்கள் குடியேற்றத்தை தடுப்பதற்காக இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவில் தங்கி ஆதார் கார்டு போன்றவற்றை பெற்று தங்களை இந்திய குடியுரிமை வாசிகளாக காட்டிக் கொள்ளும் நிலையில் இதனை தடுக்கும் விதமாகவே இது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.