இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. இது பிறந்த குழந்தை முதல் அனைவரும் கட்டாயம் பெற வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. அதிலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான அடையாள அட்டை ஆகும். ஏனெனில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் மாணவர்கள் பெறுவதற்கு ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இவ்வளவு முக்கியமான ஒரு அடையாள அட்டையாக கருதப்படும் இந்த ஆதார் அடையாள அட்டையை நாம் கவனமாகவும் பிழைகள் எதுவும் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில மாணவர்கள் இந்த ஆதாரை புதுப்பிக்காமல் வைத்திருப்பர் அவர்களுக்காக இப்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் தொடங்கியுள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அரசு சார்பில் பல சலுகைகள் செய்யப்பட்டு தான் வருகிறது. இது போன்ற பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகள் மற்றும் உதவித்தொகைகள் என அனைத்து வழங்கப்படுகிறது. இவை அனைத்து நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு வைக்கப்பதற்கு ஆதார் எண் மிகவும் அவசியமானதாக உள்ளது.
இதன் காரணமாக தான் ஆதாரை பிழையில்லாமல் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. அவ்வாறு பிழைகள் ஏதும் இருப்பின் அதனை மாணவர்கள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஆனால் இ சேவை மையங்களுக்கு சென்று இதனை செய்வதற்கு மாணவர்களுக்கு நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது. இதனை எளிதாக மாற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆதாரை புதுப்பித்தல் மற்றும் இதர ஆதார் சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் அரசு பள்ளிகளில் எந்தவித கட்டணமும் இன்றி செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணத்துடன் செயல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.