Breaking News

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை!

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை!

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் கட்டாயம் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி மின்வாரியம் அறிவித்தது.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதனை இணைக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடு நிறைவடைகிறது. 

மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது விட்டதாக கூறப்படுகிறது.