TVK VSK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மூலம் விஜய் மற்றும் திருமா ஒரே மேடையை பகிர்ந்திற்க நேரும் அத்தோடு அடுத்த கூட்டணி குறித்து வியூகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு இடம் கொடுக்காமல் திருமா இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியை அவரது கட்சி நிர்வாகி நடத்துவதால் அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன் வைக்கவும் பட்டது..
அந்தவகையில் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இருவரும் திமுக-வை நேரடியாக தாக்கி பேசினர். குறிப்பாக திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இவ்வாறு பேசுவதா என ஆதவ் அர்ஜுனா மீது பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதனையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். மேற்கொண்டு அமைச்சர்கள் முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவரை கட்சியை விட்டு நீக்கலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நீக்கும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைவதுடன் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர்.
விசிக வில் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கியுள்ளதால் கட்டாயம் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என கூறுகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.