ஆடி மாத கூழும் வியக்க வைக்கும் அறிவியல் காரணமும்!! ஹோ.. இதற்கு தான் கூழ் ஊற்றுகிறார்களா?

Photo of author

By Divya

ஆடி மாத கூழும் வியக்க வைக்கும் அறிவியல் காரணமும்!! ஹோ.. இதற்கு தான் கூழ் ஊற்றுகிறார்களா?

ஆன்மீக மாதமான ஆடி அம்பாளுக்கு உரிய மாதமாக உள்ளது.அதேபோல் ஆடி மாதம் விவசாயத்திற்கு நீர்வரத்து அதிகமாகும் மாதமாக உள்ளது.ஆடி பிரபு,ஆடி கிருத்திகை,ஆடி பெருக்கு என்று ஆடி மாதத்தில் பல விசேஷங்கள் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது அம்மனுக்கு படைக்கும் கூழ் தான்.ஆடி மாத கோயில் திருவிழாக்களில் கூழ் ஊற்றும் நிகழ்வு ஒரு திருவிழாகவே கொண்டாடப்படுகிறது.ஆனால் ஆடி மாதத்தில் கோள் ஊற்றுவதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.

நம் முன்னோர்கள் கடைபிடித்த ஒவ்வொரு நிகழ்விற்கு அறிவியல் பூர்வ காரணம் இருக்கும் என்பது அனைவரும் அறைந்த உண்மையே.அந்த வகையில் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவதற்கு பின்னணியிலும் ஓர் அறிவியல் காரணம் இருக்கிறது.

ஆடி மாதத்தில் அதிகளவு மழை பொழிவு ஏற்படும்.பருவகாலமான ஆடி மாதத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதால் நோய் தொற்றுக்கள் அதிகளவு பரவும் சூழல் ஏற்படும்.பருவநிலை மாற்றத்தால் உருவாகும் நோய் கிருமிகளை கட்டுப்படுத்த உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு தேவைப்படும்.அது மட்டுமின்றி ஆடி மாதத்தில் நிகழும் தட்ப வெப்பநிலை காரணமாக கடுமையான காற்று வீசும்.இதனால் காய்ச்சல்,இருமல்,உடல் வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

இதனால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்க ஆடி மாதத்தில் ராகி,கம்பு போன்ற சிறு தானியங்களை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதினால் அம்மாதத்தில் கேழ்வரகு,கம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி கூழ் செய்து அம்மனுக்கு படைக்க வேண்டுமென்றும் இதன் மூலம் ஏழை,எளியோருக்கு பசியாற்றிட முடியும் என்று எண்ணி ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.