திருப்பழுவூர் (எ) கீழப்பழுவூர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி செல்லும் மற்றும் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் இவ்விரு சாலை மையத்தில் பழுவூர் ஆலந்துறையார் ஆலயம் அமைந்துள்ளது.
பாழு என்பது ஆலமரம் ஆகும் எனவே இங்குள்ள இறைவன் ஆலந்துறையார் என்று போற்றப்படுகிறார்.பார்வதி தேவி ஒற்றைக்காலில் நின்றபடி இத்தல இறைவனை வணங்கி அருள் பெற்றதால் அருந்தவ நாயகி என்று போற்றப்படுகிறாள்.
பரசுராமர் தன் சாபம் நீங்க இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலம் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தளமாகவும் காவிரி வடகரையில் 55வது தலமாகவும் அமைந்துள்ளது.இத்தளத்தில் பங்குனி மாதம் பதினெட்டாம் நாள் சூரியன் தன் கதிர்களை கொண்டு இத்தல இறைவனை வழிபடுகிறான் அதுமட்டுமின்றி இத்தளத்தின் விழா மாதமாகவும் பங்குனிமாதம் அமைகின்றது.
இக்கோவிலின் கட்டிடக்கலை யானது முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இரண்டு பிரகாரங்கள் கொண்டு கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் சங்ககாலச் சோழர்களின் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் உட்பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மணக்கோலம், சபாபதி கஜசம்ஹார மூர்த்தி, சோமஸ்கந்தர் மேலும் பல சிற்பங்கள் காண்போரை ரசிக்கும்படி அமைந்து உள்ளது.
தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி அமைக்கப்பட்ட வாயில் படியின் மேல் பகுதியில் அரை அடிக்கும் குறைவான நடராஜர் சிற்பம் மிகவும் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளது இச்சிற்பம் மேலும் என்னை கவர்ந்தது.
இத்தல தேவி தவம் புரிந்து இறைவனை அடைந்ததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவா வண்ணம் இருக்க இத்தல இறைவன் இறைவியை வணங்குதல் மிகச் சிறப்பாக வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகிறது.
மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் திருப்பழுவூர்(எ) கீழப்பழுவூர் அருந்தவ நாயகி உடனமர் ஆலந்துறையார் வணங்கி வாருங்கள் உங்கள் அனுபவங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்