சபாநாயகரின் கோரிக்கை நிராகரிப்பு ..?அதிரடி முடிவு எடுத்த உச்சநீதிமன்றம்

0
78

டெல்லி உச்சநீதிமன்றத்தில் 18 எம் எல் ஏக்களின் விவகாரத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது.மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார் .அவர் உள்பட 19 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தானில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கினை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் வரும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறினார். 18 எம்எல்ஏக்கள் மீது தொடர்ந்த வழக்கை ஜூலை 24-ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனக்கூறி விசாரணையை வரும் 24ம் (நாளை) தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதனை அடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சட்ட விரோதமானது என்று. சபாநாயகர் கோஷி கூறினார் இந்த செயல் மூர்கத்தனமானது என்றும், சபாநாயகரின் அதிகாரத்தை குறைக்கும் எனக்கூறி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை ரத்து செய்யக்கோரி சபாநாயகர் கோஷி நேற்று உச்சநீதிமன்றத்தில மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் கோஷியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், திட்டமிட்டபடி ராஜஸ்தான் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நீதிபதிகள் மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
Pavithra