அடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்!

0
204

அடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்!

அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் இந்த படம் அமீர்கானின் திரை வாழ்க்கையில் இல்லாத மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

இந்த ஆண்டு  முழுவதும் வெளியான பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. இதனால் பாலிவுட் சினிமாவுக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தமிழ்ப் பட இயக்குனர் ஒருவரைதான் அமீர்கான் தேர்வு செய்துள்ளாராம்.

கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை இயக்கிய ஆர் எஸ் பிரசன்னாவிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர் பாலிவுட்டில் கல்யாண சமையல் சாதம் படத்தின் ரீமேக்கை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ ஆர் முருகதாஸுக்கு பிறகு அமீர்கானை இயக்கும் தமிழ் இயக்குனராக பிரசன்னா வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleபெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட்
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்!