பெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட்

0
333

பெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட்

இந்தியா மற்றும் தென் ஆப்பிர்க்கா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் முடிந்தது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார்.

டி 20 உலகக்கோப்பைக்காக சீனியர் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஷிகார் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர். அதே போல பந்துவீச்சிலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மதியம் இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகார் தவான் பவுலிங் செய்ய முடிவெடுத்தர். பேட் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் அவர்களால் பெரியளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் தடுமாறினர். இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைபப்ற்றினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

Previous articleதமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!
Next articleஅடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here