90 நாட்கள் வரை கெடாத ஆவினின் “டிலைட் பால்”! ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?
ஆவின் நிறுவனம் புதிது புதிதாக அப்டேட்டை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையில் கூட, தீபாவளி இனிப்புகளில் புதிய முறையை கொண்டு வந்தது. தற்பொழுது தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் அதற்கு ஏற்ப அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த புதிய வகை அப்டேட் தான் ஆவினின் டிலைட் பால் ஆகும்.
பருவ மழை என்றாலே தமிழகம் மற்றும் அதை சுற்றி உள்ள மாநிலங்களில், அதிகளவு மழை பெய்து தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. அதிக கனமழையால் பல வீடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கையை வாழ விடாமல் புரட்டி போடும் அளவிற்கு இயற்கை சீற்றம் நடக்கிறது.இவ்வாறு இந்த இயற்க்கை சீற்றத்தில் சிக்கி கொள்பவர்கள் உபயோகிக்கும் வகையில் தான் ஆவினின் இந்த டிலைட் பால் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த டிலைட் பால் 90 நாட்கள் வரை கெடாது என்று கூறியுள்ளனர். குளிர்சாதன வசதி இன்றி 90 நாட்கள் நாம் இந்த பாலை வெளியே வைத்து உபயோகிக்கலாம் எனக் கூறியுள்ளனர். இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பொழுது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி சென்று அவர்களுக்கு முதலுதவி கொடுத்து, தேவையானதை வழங்குவர். அவ்வாறு தங்க வைக்கும் குழந்தைகளுக்கு அந்நேரத்தில் பால் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகுவர்.
தற்பொழுது இது உபயோகமானதாக இருக்கும். இந்த ஆவினின் டிலைட் பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு உள்ளதாக கூறியுள்ளனர். வழக்கம்போல் இந்த பாலை வாங்கியதும் சூடு படுத்தி பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். ஆவின் வெளியிட்டுள்ள இந்த டிலைட்ப்பாலின் அரை லிட்டர் விலை 30 ரூபாய் என தெரிவித்துள்ளனர். பாமர மக்கள் அனைவரும் வாங்கி உபயோகப்படுத்தும் அளவிற்கு தான் இதன் விலையையும் நிர்ணயித்து உள்ளனர்.